×

காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாள் கஜ வாகனத்தில் விநாயகர் பவனி

சித்தூர்: காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 6ம் நாளில் கஜ வாகனத்தில் விநாயகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.சித்தூர் அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, 21 நாட்கள் பிரமோற்சவம் நடக்கிறது. பிரமோற்சவத்தையொட்டி காலை, இரவு என இரண்டு வேளையும் தனித்தனி வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட கஜ வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளம் முழங்க நான்குமாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதி உலாவில் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடியும், பஜனைகள் பாடியபடியும் கலந்துகொண்டனர்.இதில் வன்னிய நாயக்கர் குலத்தை சேர்ந்தவர்கள் பூஜை செய்து கஜ வாகனத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர். இன்று ரத உற்சவம் நடக்கிறது.மேலும், இக்கோயிலில் வார விடுமுறை நாட்களில் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ganayakkam Temple Ganesha Bhavani ,festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!