×

குரூரில் செல்லாண்டி அம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் : திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர்

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் மாரியம்மன் செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழாவின் போது சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு கிராமத்தைச் சுற்றி​ தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். அதுபோல் இருந்த தேர் சிதிலமடைந்து சேதமடைந்தது. அதனால் புதிய தேர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கோயில் குடிபாட்டு மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி தேர் செய்வதற்காக அரசு நிதி மற்றும் பொதுமக்கள் நிதி மூலம் ​சுமார்] ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டது. புதிய தேரின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் நேற்று தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

முன்னதாக தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு​ காலை​ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.​ பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட தேரின் முன்பு தீர்த்த குடங்களை வைத்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் புதிய தேரின் மீது தீர்த்த குடங்களை வைத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை, மங்கூன் நாட்டார்மங்கலம், செட்டிகுளம், பாடாலூர், கூத்தனூர் இரூர்​, சிறுவயலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த​ திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.​

Tags : Chellandi Amman Temple ,
× RELATED சொர்ணாகர்ஷ்ண பைரவர்