மீனாட்சி அம்மன் கோயிலில்‘நரியை பரியாக்கிய திருவிளையாடல்’

மதுரை, : ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை’ நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத்திருவிழா புராண வரலாற்று சிறப்பு மிக்கது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டவனின் திருவிளையாடல் காட்சிகள் இடம் பெறுகிறது. 8ம் நாளான நேற்று இறைவனின் ‘நரியை பரியாக்கிய லீலை’ நடந்தேறியது. இத்திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

நேற்றுமாலை 6 மணிக்கு கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறிக் கொடுத்த லீலை நடைபெற்றது. திருக்கண் முடிந்த பின் இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதியில் அம்மன், சுவாமி தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளினர்.ஆவணி மூலத்திருவிழாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தேறுகிறது. இதற்காக மீனாட்சி அம்மனும், சுவாமியும் கோயிலில் இருந்து மதுரை புட்டுத்தோப்பில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.

Tags : Meenakshi Amman Temple ,
× RELATED மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பேவர்...