×

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

திருவள்ளூர்: 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 188 நாடுகள் பங்கு பெறுகிறது. சுமார் 2,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செஸ் ஒலிம்பிக்  போட்டிக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனை மேம்ப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் செஸ் போட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செஸ் விளையாட்டு போட்டிகள், மராத்தான், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணர்வுக்கான ஒட்டு வில்லைகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விழிப்புணர்வு  ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : 44th Chess Olympiad Competition Vehicle ,Thiruvallur ,44th Chess Olympiad Games ,Mahabalipuram ,44th Chess Olympiad ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்