×

இரும்பு உருக்காலையில் கிரேன் விழுந்து வடமாநில வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில் எல்லையம்மன் கோயில் இருந்து தண்டலச்சேரி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான, மின்உற்பத்தி மற்றும் இரும்பு உருக்காலை உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பீகார், ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இந்த பகுதியில் தங்கி பணியாற்றுவது வழக்கம். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிகொரிலால் (35) எனற வாலிபர் கிரேன் ஆப்ரேட்டராக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்துள்ளார். பணியின்போது எதிர்பாராதவிதமாக மேலிருந்து கிரேன் தலையில் விழுந்தது. இதில் பிகொரிலாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சகஊழியர்கள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர். …

The post இரும்பு உருக்காலையில் கிரேன் விழுந்து வடமாநில வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Waliber ,Kummitypoondi ,Kummipipundi ,Kummhippundi ,
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ...