×

உலக தடகள சாம்பியன் போட்டியில் கென்ய வீராங்கனை அசத்தல்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் 14வது உலக தடகள சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீராங்கனை தங்கப் பதக்கத்தினை தட்டிச் சென்றார். ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் கடந்த 4 நாட்களாக உலக சாம்பியன் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 வீராங்கனைகள் தங்கப் பதக்கத்திற்கு போட்டியிட்டனர். இதில் கென்யாவை சேர்ந்த ஃபெய்த் கிபியேகான் அசுர வேகத்தில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். இவர் 3 நிமிடம் 55.96 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்று குதூகலித்தார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த கிடாவ் சேகே 3 நிமிடம் 54.52 வினாடிகளில் இலக்கை கடந்து 2ம் இடத்தை பிடித்தார். மகளிருக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலா வீராங்கனை யூலிமார் ரோஜாஸ் தங்கபதக்கத்தை கைப்பற்றினார். இவர் தனது 2வது வாய்ப்பால் 15.47 மீ தூரம் தாண்டினார். அதுவே அவருக்கு முதலிடத்தை பிடித்து கொடுத்தது. இந்த பிரிவில் ஜமைக்காவின் ரிக்கெட்ஸ் மற்றும் அமெரிக்காவின் பிராங்க்ளின் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கத்திற்காக 11 வீரர்கள் களத்தில் குதித்தனர். அதில் கத்தார் நாட்டை சேர்ந்த  முத்தாஸ் இஷா மார்ஸம் என்பவர் தனது முதல் வாய்ப்பிலேயே 2.37 மீ உயரம் தாண்டி தங்கம் வென்று ரசிகர்களை பரவச படுத்தினார்.   …

The post உலக தடகள சாம்பியன் போட்டியில் கென்ய வீராங்கனை அசத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : World Athletics Championship ,Washington ,14th World Athletics Championship ,America ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...