×

Space Research-ல் ஐ.ஐ.டி. நிர்வாகம் அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளதாக ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி வீழிநாதன்

சென்னை: Space Research-ல் ஐ.ஐ.டி. நிர்வாகம் அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளதாக ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி வீழிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி வீழிநாதன் அளித்த பேட்டியில், தொடர்ந்து 7-வது ஆண்டாக பொறியியல் கல்வி நிறுவனப் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 4-வது ஆண்டாக ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பெற்றுள்ளது. 5 வகைகளில், 100 விதமான தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. NIRF தரவரிசையால், உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. NIRF தரவரிசை, எதிர்காலத்தில் சர்வதேச உயர்கல்வி நிறுவன தரவரிசைப்பட்டியலாகவும் உருவெடுக்கும். ஆன்லைன் கல்விக்கான முக்கியத்துவம் உலகளவில் உருவாகிறது. ஏற்கனவே ஆன்லைன் கல்வியில் சிறந்து விளங்கும் சென்னை ஐ.ஐ.டி.க்கு, இந்த வாய்ப்பு நிச்சயம் பலனளிக்கும் என்று கூறினார். வருடத்துக்கு 7 லட்சம் பேர் சென்னை ஐ.ஐ.டி.யின் ஆன்லைன் கல்வி மூலம் பலனடைகின்றனர். இந்த ஆண்டில் 200-க்கும் மேல் காப்புரிமை கோரப்பட்டுள்ளது. அதில் 170 வகையான பொருட்கள், தொழில் நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஐ.ஐ.டி.யின் காப்புரிமை பெறுவது, ஆராய்ச்சி பாதிக்கப்படவில்லை. பிற கல்லூரிகளும், தங்கள் Idea-க்களை செயல்படுத்தி அதற்கு காப்புரிமை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் தேசத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றார். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான தொழில் நுட்பங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 1.34 லட்சம் பேர் சென்னை ஐ.ஐ.டி.யின், Out of The Box திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகள், பாலிடெக்னிக், கல்லூரிகளுக்கும் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். …

The post Space Research-ல் ஐ.ஐ.டி. நிர்வாகம் அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளதாக ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி வீழிநாதன் appeared first on Dinakaran.

Tags : Space Research ,GI TD ,GI ,TD ,Kamakodi Veezinathan ,I.A. ,Dinakaran ,
× RELATED ஆதித்யா எல் 1 ஏவப்பட்ட அன்று எனக்கு...