×

காஷ்மீரில் துணை ராணுவ வீரர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். தெற்கு காஷ்மீர் பகுதியான கங்கூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிஆர்பிஎப் வீரர்களும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் படுகாயம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்….

The post காஷ்மீரில் துணை ராணுவ வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,CRBF ,Jammu and ,Pulwama district ,South Kashmir ,Gangu ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...