×

ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் நிகழ்ச்சி: புதுமணத் தம்பதிகள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினர்

கரூர்: ஆடி மாதம் முதல் நாளையொட்டி கரூரில் நடைபெற்ற தேங்காய் சுடும் நிகழ்வில் புதுமணத் தம்பதிகள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஆடி மாதத்தில் 18 நாட்களாக நடைபெற்ற மகாபாரத போர் தொடங்கிய முதல் நாளான நேற்று தேங்காயை சுட்டு இறைவனுக்கு படைத்து அதனை பிரசாதமாக வழங்குவதை கரூர் நகர மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கரை புரண்டு ஓடும் அமராவதி மற்றும் காவேரி ஆற்றங்கரையில் நடத்தப்படும், இந்த ஆடி மாத முதல் நாள் பிறப்பு போதிய தண்ணீர் இல்லாததால் கரைகளில் நடத்தப்பட்டது. அமராவதி ஆற்றின் அருகே குவிந்த புதுமணத் தம்பதிகள் உள்ளிடோர் தீ மூட்டி தாங்கள் கொண்டு வந்த தேங்காய்களை நெருப்பில் சுட்டு எரித்தனர். பெரியவர், சிறியவர் என ஏராளமானோர் பங்கேற்று கூடி நின்று தேங்காயை சுட்டு எரித்தார்கள். பின்னர், அதனை அரசமர விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டனர். பின்னர், பிரசாதமாக பிறருக்கு அவர்கள் வழங்கினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிந்தாமணி காட்டில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆடி மாத பிறப்பையொட்டி அரசமரத்துக்கும், வெப்பமரத்துக்கும் திருமணம் நடைப்பெற்றது. அரசமரத்தை ஆணாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் கருதி பட்டு ஆடைகள் சுற்றப்பட்டு நடந்த விழாவில் பெரும் திரளாக கலந்து கொண்ட கிராம மக்கள் திருமண சீரை கொண்டு வந்து தரிசனம் செய்தனர்….

The post ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் நிகழ்ச்சி: புதுமணத் தம்பதிகள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினர் appeared first on Dinakaran.

Tags : Audi Month Birthday ,shooter ,Karur ,Audi ,Audi Month Birthday Coconut Shooter ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...