×

‘நான் ஐஸ்வர்யா ராயின் மகன்’ – வாலிபரின் வீடியோவால் பரபரப்பு

மும்பை: ஐஸ்வர்யா ராயின் மகன் என வாலிபர் பேசும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் பிரிய உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இந்நிலையில் நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பேசும் சங்கீத் குமார் என்ற நபர், ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதாக இருக்கும்போது தான் பிறந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், லண்டனில் தான் பிறந்ததாகவும், லண்டனில் பிறந்த பிறகு ஐஸ்வர்யாவின் பெற்றோர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து வளர்த்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பிறப்பு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவில் பேசிய நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், மேலும் இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா ராய் திருமண வாழ்க்கை முறிவு தொடர்பாக செய்திகள் வரும்போது, இந்த வீடியோவை மீண்டும் யாரோ பரப்புகிறார்கள் என சொல்லப்படுகிறது.

Tags : Aishwarya Rai ,Mumbai ,Bollywood ,Abhishek Bachchan ,Aaradhya ,Abhishek Bachchan… ,
× RELATED விவாகரத்து செய்தி பரவி வரும் நிலையில் மீண்டும் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்