×

கூடலூர் அருகே சுடுகாட்டில் துப்பாக்கியுடன் நடமாடிய வாலிபர் சிக்கினார்

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ள துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாக மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். இந்நிலையில் தனிப்படையினர், கூடலூர் தாலுகா, நியூ ஹோப் காவல் எல்லைக்குட்பட்ட எல்லமலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, எல்லமலை சுடுகாட்டை ஒட்டிய பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நடமாடிய அதே பகுதியை சேர்ந்த பாவா (எ) அப்துல்சக்கீர் (33) என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அப்துல் சக்கீர் நாட்டு துப்பாக்கியை வேட்டைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட அவரையும், துப்பாக்கி, தோட்டாக்களை நியூ ஹோப் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து நியூஹோப் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post கூடலூர் அருகே சுடுகாட்டில் துப்பாக்கியுடன் நடமாடிய வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Aasish Rawat ,Nilgiri district ,Kuddalore ,Dinakaran ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...