- கலிக்கம்பட்டி
- சின்னாளப்பட்டி
- வெள்ளோடு
- பெருமாள்கோவில்பட்டி
- அமலினகர்
- ஜே.ஊத்துப்பட்டி
- ஜாதிகவுண்டன்பட்டி
- செட்டியபட்டி
- மேட்டூர்
- கோடயிராட்
- அம்மையநாயக்கனூர் கமலாபுரம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்திலுள்ள வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர் காமலாபுரம், கலிக்கம்பட்டி, நடுப்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது. மண் வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீர்களால் இப்பகுதியில் விளையும் திராட்சைகள் நன்கு ருசியுடன் இருப்பதாலும், நல்ல நிறத்துடன் வளர்வதாலும் தமிழகம், கேரளாவில் இப்பகுதி திராட்சைகளுக்கு தனி மவுசு உண்டு. கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிக்கு அடுத்தாற்போல் இப்பகுதியில் உள்ள திராட்சைகளுக்குத் தான் அதிக கிராக்கி உள்ளது. தற்போது கலிக்கம்பட்டி பகுதியில் திராட்சை கொடியில் காய்கள் பிடித்து வருகின்றன. இதனால் திராட்டை கொடியில் கவாத்து பணியில் ஒவ்வொரு தோட்டங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திராட்சை கொடியை முற்றிலும் சுற்றி பார்த்து அவற்றில் உள்ள தேவையில்லாத இலைகள், பழுதடைந்த காய்களை அகற்றிவிட்டு கொடியை வாழை நார் கொண்டு கட்டி வரும் பணியில் ஈடுபட்ள்ளனர். கவாத்து பணியில் ஈடுபட்டுள்ள எ.வெள்ளோட்டை சேர்ந்த மகிமைநாதனிடம் கேட்டபோது, ‘எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான் திராட்சை கொடியை முழுமையாக தெரியும். அதனால்தான் திராட்சை கொடி பதியம் போடுவது, ஊன்றுவது, பந்தல் அமைப்பது, கவாத்து பணிகள் செய்வது போன்வற்றிற்கு வெள்ளோடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை அழைப்பர். இப்பணிக்கு எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 கூலியாக வழங்கப்படுகிறது’ என்றார்….
The post கலிக்கம்பட்டி பகுதியில் திராட்சை கொடியில் கவாத்து பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.