×

பாரிமுனை-குறளகம் சந்திப்பில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

தண்டையார்பேட்டை: பாரிமுனை-குறளகம் சாலை சந்திப்பில் உள்ள மழைநீர் கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்றிரவு சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையின் முக்கிய இதயப் பகுதியாக பாரிமுனை-குறளகம் சாலை சந்திப்பு விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பல்வேறு பணிகள் காரணமாக மக்கள் சென்று வருகின்றனர். இதே பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், பூக்கடை, காய்கறி மார்க்கெட் மற்றும் மாநகர பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.இப்பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற குறுகலான கால்வாய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவு மழை பெய்யும்போது சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடிவருகிறது. இதனால் அந்த கால்வாயை அகலப்படுத்தி தரவேண்டும் என சென்னை மாநகராட்சி 5வது மண்டல அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, பாரிமுனை-குறளகம் சந்திப்பு பகுதியில் 5வது மண்டலத்தின் பகுதி செயற்பொறியாளர்கள் சொக்கலிங்கம், லாரன்ஸ். ஆகியோர் மேற்பார்வையில் மழைநீர் கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்றிரவு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கால்வாய் 4 அடியில் உள்ளது. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அக்கால்வாயை ₹25 லட்சம் மதிப்பில் 9 அடி அகலம், 5 அடி ஆழத்தில் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பிரகாசம் சாலையில் பணிகள் நடைபெறும்போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும். இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்….

The post பாரிமுனை-குறளகம் சந்திப்பில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Parimuna-Billar ,Bandarbate ,Parimuna-Split road ,Chennai ,Parimuna-Billage ,Dinakaran ,
× RELATED வண்ணாரப்பேட்டையில் இரும்பு...