×

கும்மிடிப்பூண்டியில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தானமாக வந்த நிலத்தை ஆட்சியர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தானமாக தந்த நிலத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.  ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவ். இவர், புற்றுநோயால் மறைந்த அவரது தந்தை கிருஷ்ணைய்யாவின் நினைவாக கடந்த அக்டோபர்-2018 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டி வட்டம் சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் அவருக்கு சொந்தமாக இருந்த அன்றைய மதிப்பில் ₹8 கோடி மதிப்பிலான 37 ஏக்கர் நிலத்தை சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு தானமாக அளித்தார். இதனை தொடர்ந்து அந்த இடத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிமையம், மருத்துவ மையம் நடத்துவது குறித்து அடையாறு புற்று நோய் மருத்துவமனை முடிவெடுத்தனர்.இந்நிலையில், அந்த இடத்தில் வழி அமைப்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு நடத்தினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.மேற்கண்ட அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் 1 ஏக்கர் 18 சென்ட் இடத்தில் வழி அமைப்பது குறித்து இந்த ஆய்வில் கலந்தாலோசிக்கப்பட்டது. சூரப்பூண்டி ஊராட்சி தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் மேற்கண்ட இடத்திற்கு அருகே ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை கையகப்படுத்தி அங்கு ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை மேற்கொள்ள வழி செய்யுமாறு கோரிக்கை மனுவை அளித்தார். வருவாய் ஆய்வாளர் ராமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், கிராம உதவியாளர்கள் வசந்தா, மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர்….

The post கும்மிடிப்பூண்டியில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தானமாக வந்த நிலத்தை ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kummimdipundi ,Kummhippundi ,Ruler ,Ayalam Cancer Hospital ,AP ,Hyderabad ,K. ,Subarao ,Cancer Hospital ,Gummyppundi ,
× RELATED துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை...