×

போரினால் கிடங்குகளில் தேங்கின: கோதுமை ஏற்றுமதி பற்ற ரஷ்யா – உக்ரைன் பேச்சு

இஸ்தான்புல்: உணவு பொருட்கள் ஏற்றுமதி குறித்து ரஷ்யா, உக்ரைன் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடைபெறுகிறது. உலகளவில் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன் முதலிடம் வகிக்கிறது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், ஏறக்குறைய 220 லட்சம் டன் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகாமல் உக்ரைன் துறைமுகங்களில் கிடக்கின்றன. 16 நாடுகளை சேர்ந்த 70 சரக்கு கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், கருங்கடல் வழியாக உணவு பொருட்களை கொண்டு செல்ல ஐநா.வுடன் இணைந்து துருக்கி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான நேரடிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இந்த பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் ஐநா, துருக்கி நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அப்போது, உக்ரைனில் உள்ள பெரும்பாலான துறைமுகங்களில் கண்ணிவெடி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை நீக்கினால், கருங்கடல் வழியாக உணவு பொருள் கொண்டு செல்லும் வழித்தடத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்தாது என்று புடின் உறுதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உக்ரைன் அதிகாரிகளோ உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய விடாமல் ரஷ்யா தடுப்பதாகவும் புடினின் உறுதிமொழியை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பினர்.இதனால், இந்த பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது….

The post போரினால் கிடங்குகளில் தேங்கின: கோதுமை ஏற்றுமதி பற்ற ரஷ்யா – உக்ரைன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Russia ,Istanbul ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...