×

தண்ணீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) பட்ஜெட் கூட்டத்தொடர்களில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் நேற்று கிண்டி, சிட்கோ தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 14 அறிவிப்புகளில் 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 அறிவிப்புகளில் 3 அறிவிப்புகள் மாநில அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதியை விரைந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதிதாக அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளுக்கான நிலங்கள் கண்டறியப்பட்டு உரிய அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கு மனைகளை ஒதுக்க வேண்டும். அரசு அறிவித்த சிறு குழுமங்கள் மற்றும் பெரு குழுமங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.தனியார் தொழிற்பேட்டைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையினை உடனடியாக பெற்று திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும். குழும வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.12.37 கோடி மாநில அரசு மானியத்துடன் மொத்தம் ரூ.148.25 கோடி மதிப்பீட்டில் 28 பொது வசதி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல், ரூ.24.37 கோடி மாநில அரசு மானியத்துடன் மொத்தம் ரூ.207.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 15 பொது வசதி மையங்களுக்கான பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குறுந்தொழில் குழுமங்களுக்காக பொது உற்பத்தி மையங்கள் அமைக்கும் திட்டத்தின்கீழ் ரூ.14.87 கோடி மாநில அரசு மானியத்துடன் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 8 பொது உற்பத்தி மையங்களுக்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மேலும், புதிதாக அறிவிக்கப்பட்ட 6 பொது உற்பத்தி மையங்களுக்கான பணிகளுக்கான உரிய அனுமதிகளை விரைந்து பெற்று பணிகளை துவக்க வேண்டும். மழை காலங்களில் தொழிற்பேட்டைகளில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும். தொழிற்பேட்டைகளில் உள்ள திறந்தவெளி நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் மரங்கள் நடப்பட வேண்டும். புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க திட்டமிடப்படும்போது மின்நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும். செயல்பாட்டில் உள்ள தொழிற்பேட்டைகளில் தேவைக்கேற்ப மின்வசதி, சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திறன்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முன்பாக, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிட்கோ மருத்துவமனையில் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்து, தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 20 தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திரங்கள் மற்றும் தொழில் மனை ஒப்படைப்பு அனுமதி ஆணை வழங்கினார்….

The post தண்ணீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பரசன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbarasan ,Chennai ,Tamil Nadu Small Industries Development Corporation ,CIDCO ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...