சென்னை: கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் 25 முழுநீள திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நடிகரும், இயக்குனருமான சந்திரபிரகாஷ் திவேதி தலைமையிலான நடுவர் குழு இப்படங்களை தேர்வு செய்துள்ளது.
தவிர ‘மகாவதார் நரசிம்மா’, ‘ஆர்டிகிள் 370’, ‘12த் ஃபெயில்’, ‘ஸ்ரீகாந்த்’ ஆகிய இந்திப் படங்களும் மற்றும் ‘ஆடு ஜீவிதம்’, ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’, ‘லெவல் கிராஸ்’ ஆகிய மலையாளப் படங்களும் மற்றும் ‘ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ்’ என்ற தமிழ்ப் படமும் மற்றும் ‘சின்ன கதா காடு’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய தெலுங்கு படங்களும் மற்றும் ‘வென்கியா’, ‘கேரேபேடே’ ஆகிய கன்னடப் படங்களும் திரையிடப்படுகின்றன. மேலும், ஆவண மற்றும் குறும்படப் பிரிவில் 20 படங்கள் திரையிடப்படுகின்றன. ‘நான் ஃபீச்சர்’ பிரிவில் தமிழில் இருந்து ‘அம்மாவின் பெருமை’, ‘சிவந்த மண்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.