×

கொளப்பள்ளி பொது மயானத்தில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்கு நடமாட்டம்: மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே கொளப்பள்ளி பொது மயானத்தில் கோழி கழிவுகளை கொட்டிச்செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.பந்தலூர் அருகே சேரங்கோடு  ஊராட்சிக்குட்பட்ட கொளப்பள்ளி பஜாரையொட்டிபகுதியில் பொது மயானம் உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.இந்நிலையில் சிலர் மயானத்தில் கோழி கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் கோழி கழிவுகளை தின்பதற்கு வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் கொளப்பள்ளி பஜார் பகுதியில் வசிப்பவர்கள் மயானம் வழியாக குடியிருப்புகளுக்கு செல்பவர்களுக்கு  துர்நாற்றம் ஏற்பட்டு  மிகவும்  பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சுகாதார பாதிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கழிவுகள் கொட்டுவதை கண்டறிந்து சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கொளப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் கோழிக்கடைகளை உரிய ஆய்வு செய்து கோழிக்கழிவுகளை எவ்வாறு  அப்புறப்படுத்துகிறார்கள்?  என்பதை  கண்காணிக்க வேண்டும்,  வெளியூர்களிலிருந்து கோழிகளை ஏற்றி வரும் லாரிகள் மூலம் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறதா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.  பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் பல இடங்களில்  மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கோழிக்கழிவுகளை  கொட்டிச் செல்வதால் இது போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பொதுமக்களுக்கு இடையூறாக  பொது இடங்களில் கோழிக்கறிவுகளை கொண்டு செல்வார்கள் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்துகின்றனர்….

The post கொளப்பள்ளி பொது மயானத்தில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்கு நடமாட்டம்: மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kolapally Public Cemetery ,Pandalur ,Kolapally public ,Serangode Panchayat ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை