- நெல்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Icord
- மதுரை
- கேரளா
- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி
- ஐகார்ட் கிளை
- தின மலர்
மதுரை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் படித்த கேரள டாக்டர், தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.50 லட்சம் செலுத்த வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீஜித் ரவி அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 3 ஆண்டு நரம்பியல் பிரிவில் படித்துள்ளார். கடந்த செப்டம்பர் 2020ல் படிப்ைப முடித்தார். முன்னதாக இந்த படிப்பில் சேர்வதற்கு முன் பிரமாண பத்திரம் அளித்துள்ளார். படிப்ைப முடித்ததும் தமிழகத்தில் 10 ஆண்டு பணி அல்லது ரூ.2 கோடி செலுத்த வேண்டுமென பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றாததால், ரூ.2 கோடியை செலுத்த நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து டாக்டர் ரவி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு வக்கீல் ஓம் பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி, ‘‘பணியிடம் தொடர்பான கவுன்சலிங்கில் மனுதாரர் பங்கேற்கவில்லை.மனுதாரரைப் போன்றவர்களுக்கான நிபந்தனையை தமிழக அரசு குறைத்துள்ளது. 10 ஆண்டுகள் என்பது 2 ஆண்டாகவும், ரூ.2 கோடி என்பது ரூ.50 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற தயாரில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதால் மனுதாரர் தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும். அல்லது அரசின் நிர்ணய தொகையான ரூ.50 லட்சத்தை செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார். …
The post நெல்லையில் நரம்பியல் படித்த கேரள டாக்டர் தமிழகத்தில் 2 ஆண்டு பணி செய்ய வேண்டும்; ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
