×

நல்லாத்தூர் பள்ளியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விளக்கு, கணினி, மின் மோட்டார் பழுது: ஊராட்சி மன்ற தலைவர் மனு

திருக்கழுக்குன்றம்: ஊராட்சி ஒன்றய நடுநிலைப் பள்ளியில் குறைந்த மின் அழுத்ததால் விளக்கு, கணினி, மின் மோட்டார் பழுது  ஏற்படுகிறது. எனவே, இதனை சரி செய்ய வேண்டும் என மின் வாரியத்திற்கு நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சியில் அடங்கிய,  பொம்மராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு நல்லாத்தூர் மற்றும் பொம்மராஜபுரம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 170க்கும் மேற்பட்டோர், இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கணினி வகுப்பு மற்றும் ஸ்மார்ட் வகுப்பு உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளி அமைந்துள்ள பகுதியில் தொடர் மின் தடை ஏற்படுவதால் பள்ளியில் உள்ள மின் மோட்டார் இயக்க முடியாமல் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் வழங்க சிரமம் ஏற்படுகிறது. மேலும், கணினி சார்ந்த எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாக வேண்டிய நிலையும் உள்ளது. இதனை தொடர்ந்து, குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் விளக்கு மற்றும் கணினி, மின் மோட்டார் ஆகியவைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இந்த நிலையை சரி செய்ய தடையில்லாத மற்றும் சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நெரும்பூர் மின் வாரிய அதிகாரிகளுக்கு நல்லாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரமிளா சிவா கோரிக்கை மனு அளித்துள்ளார்….

The post நல்லாத்தூர் பள்ளியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விளக்கு, கணினி, மின் மோட்டார் பழுது: ஊராட்சி மன்ற தலைவர் மனு appeared first on Dinakaran.

Tags : Nallathur School ,Ciradu ,Padrakyakkumuram ,Dinakaran ,
× RELATED நல்லாத்தூர் பள்ளியில் குறைந்த மின்...