×

காரைக்காலில் களைகட்டிய மாங்கனி திருவிழா: மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றம்

காரைக்கால்: காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியில்லாமல், ஆலயத்தின் உள்ளேயே காரைக்காலுக்கு ஒரு புகழ்பெற்ற திருவிழாவான மாங்கனி திருவிழா வழக்கமாக நடைபெறக்கூடிய அதே உற்சாகத்துடன் பக்தர்கள் அனுமதியோடு நடைபெற்றது. கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியானது, பக்தர்கள் மாங்கனிகளை மாடிகளில் இருந்தோ அல்லது தங்கள் வீட்டு வாசல்படிகளில் இருந்தோ வாரி வீசி அடிப்பது தான் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 1,600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக்கு நிகழ்வை உணர்த்தும் விதமாக இத்திருவிழா பார்க்கப்படுகிறது. திருவிழாவானது கடந்த 11ம் தேதி மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. நேற்றையதினம் பரமபக்தருக்கும், புனிதவதி என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாணமானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறத்தல் நிகழ்ச்சியானது இன்று காலை தொடங்கியது. பிச்சாண்டவர் மூர்த்தி கோலத்தில், பரமசிவம் எழுந்தருளி பவளப் பரிமாணத்தில் ஊர்வலமாக வலம் வருவார். அதனையடுத்து, அங்குள்ள பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய மாங்கனிகளை வீசி எறியும்பொழுது, அதனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் மாங்கனிகளை பிடித்து உண்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது, இங்கு வரும் பக்தர்களின் ஆண்டாண்டு கால நம்பிக்கையில் ஒன்று. அதன் அடிப்படையில் மாங்கனி திருவிழா இன்று தொடங்கியது. வித்தியாசமான முறையில் நடைபெறும் திருவிழா என்பதால் ஏராளமான வெளிநாட்டவர்கள் மற்றும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படுவதால், காவல்துறை மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில், ஏறக்குறைய 500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை தொடங்கிய மாங்கனி திருவிழாவானது பெருமாள் கீழவீதி, கண்ணுடையார் சாலை, பாரதியார் சாலை உள்ளிட்ட சாலை வழியாக சென்று மாலை நேரத்தில் ஊர்வலமானது நிறைவு பெறும். இந்த நிகழ்வானது நாளை அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.           …

The post காரைக்காலில் களைகட்டிய மாங்கனி திருவிழா: மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Weeded Mangani Festival ,Karaikal ,Mangani festival ,Corona ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...