×

ஆத்தூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகிறார். இவர் கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் கண்டறியப்பட்ட நாள் முதலே, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்….

The post ஆத்தூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Athur ,AIADMK ,Aathur ,Chinnathambi ,Salem district ,
× RELATED மெடிக்கலில் ஊசி போட்ட மாணவன் பரிதாப பலி: கடைக்காரர் கைது