×

ம.பியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை முழுங்கியதாக முதலைக்கு டாா்ச்சா் கொடுத்த மக்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை முதலை விழுங்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியோபூா் என்ற இடத்தில் சம்பல் ஆற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் குளித்துள்ளான். அப்போது அங்கு வந்த முதலை சிறுவனை ஆற்றுக்குள் இழுத்து சென்று விழுங்கி உள்ளது. இதை பாா்த்த கிராம மக்கள் வலை, கம்பு ஆகியவற்றின் உதவியுடன் முதலையை பிடித்து ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனா். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாாிகள் முதலையை எடுத்து செல்ல முயற்சித்த நிலையில் சிறுவனின் பெற்றோா் அதற்கு எதிா்ப்பு தொிவித்தனா். முதலையின் வயிற்றில் தங்களது மகன் உயிரேடு இருப்பான் என்றும் முதலை மகனை உமிழ்ந்து விடும் என்றும் பெற்றோா் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து நீண்ட நேரத்திற்கு பின்னரே முதலையை மக்கள் விடுவித்தனா். அடுத்த நாள் ஆற்றங்கரையில் சிறுவனின் உடல் கிடைத்ததும் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது….

The post ம.பியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை முழுங்கியதாக முதலைக்கு டாா்ச்சா் கொடுத்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pi. Bopal ,Pi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் திமுக...