×

வால்பாறையில் எஸ்டேட்டிற்குள் புகுந்து வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகள்; கூட்டம் தொழிலாளர்கள் பீதி

வால்பாறை: வால்பாறையில் தனியார் எஸ்டேட்டில் புகுந்த 7 காட்டு யானைகள் வீடுகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் தொழிலாளர்கள் பீதியடைந்தனர். வால்பாறையை அடுத்து சக்தி மற்றும் தலநார் எஸ்டேட் பகுதி உள்ளது. நேற்று அதிகாலை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. பின்னர் தொழிலாளர்கள் குடியிருப்பை முற்றுகையிட்டு வீடுகளின் முன் பகுதியை உடைத்து, உள்ளிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கிருந்து சாலையில் நடந்து சென்ற யானைகள் சக்தி எஸ்டேட்டில் புகுந்து வீடு, கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மக்களுடன் இணைந்து யானைகளை அங்கிருந்து காட்டிற்குள் விரட்டி அடித்தனர்….

The post வால்பாறையில் எஸ்டேட்டிற்குள் புகுந்து வீடு, கடைகளை சூறையாடிய காட்டு யானைகள்; கூட்டம் தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : WALBARA ,
× RELATED மழையால் வெள்ளப்பெருக்கு கூழாங்கல் ஆற்றில் இறங்க தடை