×

யோகி குறித்து அவதூறு பதிவு: 12ம் வகுப்பு மாணவன் கைது

லக்னோ: தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பதிவை வெளியிட்ட 12ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட 12ம் வகுப்பு மாணவரும், முர்ஹியா பகுதியைச் சேர்ந்தவருமான ஆஷிஷ் யாதவ் (18) என்பவரை தல்கிராம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்: மாணவர் ஆஷிஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து ஆட்சேபனைக்குரிய படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து மாநில டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்’ என்றனர்….

The post யோகி குறித்து அவதூறு பதிவு: 12ம் வகுப்பு மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Lucknow ,CM ,Yogi Adityanath ,Yogi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு...