×

பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவிகள், பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும்.கடந்த ஒரு வாரமாக ரயில் நிலைய பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவர்கள் இருதரப்பினர் இடையே பஸ் நிலையம் அருகே பொதுமக்கள், மாணவிகள் நின்ற பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஒரு கட்டத்தில் சில மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவர்களை துரத்தி துரத்தி சென்று தாக்கினர். மேலும், கற்களை வீசி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்டவர்களும் மாணவர்களால் தாக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்கள் உருட்டு கட்டைகளை எடுத்து வந்தும் ஒருவரோடொருவர் மோதினர். இந்த தாக்குதலின்போது ஒரு மாணவரை, மற்றொரு பள்ளி மாணவர்கள் கம்பு மற்றும் ஹெல்மெட்டால் தாக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் கண்டித்ததுடன், அதனை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த மோதல் சம்பவம் குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிலரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்….

The post பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல்: மாணவிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Nadurode ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...