×

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வி: விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு கோத்தபய அனுப்பிய விண்ணப்பத்தை அந்நாடு அரசு நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபயா ராஜபக்சே குடியுரிமையை கைவிட்டார். அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதனால் மீண்டும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய திட்டம் தீட்டியுள்ளார். கோத்தபயாவுக்கு விசா வழங்க மறுத்துவிட்டதால் வேறு நாட்டுக்கு தப்பிச் செல்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கலிஃபோர்னியாவுக்கு செல்வதர்க்கு கோத்தபய ராஜபக்சே விடுத்த விசா கோரிக்கை நிராகரிக்க பட்டதாக அமெரிக்கா தூதரக அதிகாரி சற்று முன்னர் உறுதிப்படுத்தினார். கடந்த சனிக்கிழமை  இலங்கையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.அப்போது இலங்கை அதிபர் கோத்தபய அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்பட்டது. மேலும் கடல் மார்க்கமாக அவர் கடல் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக தகவல்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இலங்கை அதிபர் எங்கிருக்கிறார் என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்நிலையில், கலிபோர்னியா செல்வதற்கு கோத்தபய ராஜபக்சே விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். …

The post இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வி: விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : President Gotabaya Rajapaksa ,America ,Colombo ,Lankan ,President ,Gotabaya Rajapaksa ,Gotabaya ,Gotabaya Rajapakse ,
× RELATED அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி...