×

2வது டெஸ்ட்: சதம் விளாசினார் சண்டிமால்: இலங்கை முதல் இன்னிங்சில் முன்னிலை

காலே: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்மித் 145* ரன், லாபுஷேன் 104 ரன் விளாசினர். இலங்கை தரப்பில் அறிமுக சுழல் பிரபாத் ஜெயசூரியா (30 வயது) 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்திருந்தது. நிசங்கா 6, கேப்டன் கருணரத்னே 86 ரன்னில் ஆட்டமிழந்தனர். குசால் 84, மேத்யூஸ் 6 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குசால் 85, மேத்யூஸ் 52, கமிந்து மெண்டிஸ் 61, டிக்வெல்லா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன் குவித்துள்ளது. சண்டிமால் 118 ரன், ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. தரப்பில் ஸ்டார்க், லயன், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இலங்கை 67 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது….

The post 2வது டெஸ்ட்: சதம் விளாசினார் சண்டிமால்: இலங்கை முதல் இன்னிங்சில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Chandimal ,Sri Lanka ,Galle ,Australia ,Galle International Stadium ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...