×

மீஞ்சூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். தனசேகரன் முன்னிலைவகித்தார். முன்னதாக எம்.பி.தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 3 மாதத்துக்கு  ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் சுற்றுலா செல்ல வேண்டும். 2022-2025ம் ஆண்டுக்குள் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்தானம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். …

The post மீஞ்சூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Meenjoor ,Ponneri ,Tiruvallur ,District ,INDUC Council National Trade Union Congress ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...