×

84 உறவினர்களுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

திருத்தணி: திருத்தணியில் 84 உறவுகளுடன் 100வது பிறந்த நாளை மூதாட்டி  கொண்டாடினார். திருத்தணி வேலஞ்சேரி காலனியை சேர்ந்தவர் நாகன். இவரது மனைவி கண்ணம்மாள்(100). இவருக்கு 9 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இவர்களும் திருமணம் நடந்து மகள், மகன், பேத்தி, பேரன்கள் என இவர்களுக்கு 84 உறவுகள் உள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கண்ணம்மாளுக்கு நேற்று 100வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கண்ணம்மாளின் மகன்கள், மகள்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என மொத்தம் 84 பேர் இணைந்து வேலஞ்சேரி காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடினர். அப்போது கண்ணம்மாள் கேக் வெட்டி தனது உறவினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து, 84 உறவினர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினர்….

The post 84 உறவினர்களுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Nagan ,Tiruthani Velanchery Colony ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...