×

கும்மிடிப்பூண்டி அருகே கொண்டமாநல்லூரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை ஒட்டி கொண்டமாநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழிற்சாலையில் இருந்து தினந்தோறும் இறால் பதப்படுத்தும் கழிவு நீர் அருகே உள்ள மாந்தோப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான இடங்களில் விடப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மதிக்கப்படுவதாக ஏற்கனவே பலமுறை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அதிக நச்சுத்தன்மையுடைய இறால் கழிவுகளை சாலையோரமாக விடுவதாலும் மற்றும் லாரிகள் மூலம் கொண்டமானூர் வழியாக கொண்டு செல்வதாலும் அதிக துர்நாற்றமும் வீசியது. மேலும் அதிக அளவில் கொசுக்கள் உண்டாகி இரவு நேரங்களில் கடித்து வருவதால் டெங்கு, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகியதால் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் மாசு கட்டுப்பட்டு வாரியம் உதவியோடு தொழிற்சாலைக்குச் செல்லும் மின்சாரத்தை  தடை செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். * திருவள்ளூர் எம்பி நேரில் ஆய்வுதகவலறிந்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொழிற்சாலை முழுவதும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொழிற்சாலை பணிகள் நடைபெறாததால் எந்த அறிகுறியும் தெரியாதவாறு இருந்தது. ஆனால் இறால் கழிவுநீர் வெளியேறும் கழிவுகள் தொட்டியில் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலையின் பூங்காவிற்கு விடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதை அறிந்த அவர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் கண்ணன், சிப்காட் துணை மின் நிலையத்தின் பொறியாளர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா பிர்லா, காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர் சம்பத், மதன்மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்….

The post கும்மிடிப்பூண்டி அருகே கொண்டமாநல்லூரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Andamanallur ,Kummidipundi ,Kummhipundi ,Kummippundi ,Dinakaran ,
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...