×

திருப்போரூரில் சாலை விரிவாக்கப் பணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்

திருப்போரூர்:  செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் ரவுண்டானா வரை உள்ள 27 கி.மீ. சாலையை 100 அடி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று முடிந்து தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்போரூர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் சாலை வரையில் சாலையின் இரு பக்கங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பலரும் கட்டிடங்கள் கட்டி அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், விரைவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை ஒட்டி ஓஎம்ஆர் சாலையை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக திருப்போரூர் ரவுண்டானாவை ஒட்டி செங்கல்பட்டு சாலை மற்றும் மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் கையெழுத்திட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதற்கான நோட்டீஸ் அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் கடந்த 4ம் தேதி வழங்கப்பட்டது. நோட்டீஸ் பெறாதவர்களின் கட்டிடங்களில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமைக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் கட்டிட உரிமையாளர்களே அகற்றிக் கொள்ளவேண்டும் என்றும், தவறினால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவுத்தொகை கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த இரு நாட்களாக ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமித்து கடைகளை கட்டி இருந்தோர் தாங்களாகவே அகற்றி வருகின்றனர்….

The post திருப்போரூரில் சாலை விரிவாக்கப் பணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Highway Department ,Tirupporur Tirupporur ,Chengalpat ,Tirupporur Roundana cm ,Thirupporur ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்...