×

இனிப்பு சீயம்

தேவையானவை:

மேல் மாவுக்கு :
பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

பூரணத்துக்கு:


பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கி வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊற விடவும். பாசிப்பருப்பை குழையாமல், மலர வேக வைக்கவும். தண்ணீரை முற்றிலும் வடித்து, அதில் சர்க்கரை, தேங்காய் சேர்த்து எல்லாம் சேர்ந்தாற் போல் வரும்வரை கிளறவும். முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பூரணம் ரெடி. ஊற வைத்த அரிசி, உளுந்தை, வடைக்கு அரைப்பது அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து எடுக்கவும். எண்ணெய் காய்ந்ததும், செய்து வைத்த உருண்டையை, மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி