×

பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவது ஏன்?

கணநாதன் வழிபாட்டில் தோப்புக் கரணம் முக்கிய இடம் பெறுகிறது. தோப்புக்கரணம் எவ்வாறு போட வேண்டும் என்ற விதிமுறை முறையும் உள்ளது. அதாவது வலதுகையால் இடது காதும், இடதுகையால் வலது காதும் தொட்டு கொண்டு, இருகால்களும் பிணைத்து நின்று கொண்டு, கைமுட்டுக்கல் பலமுறை தரையில் தொட்டு கணபதியை வணங்க வேண்டும்.வேறெந்த தெய்வ சந்நதியிலும் தோப்புக் கரணம் போடுதல் என்ற விதிமுறையில்லை. ஆனால் கணபதி சந்நிதானத்தில் இது மிக முக்கியம்
       
இடது காலின் மேல் ஊன்றி நின்று வலது கால் இடதுகாலின் முன்பக்கமாக இடதுபக்கம் கொண்டு வந்து பெருவிரல் மட்டும் தரையில் தொட்டு நிற்கவும். இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து வலது காதிலும் வலது கை இடது கையின் முன் பக்கமாக இடது பக்கம் கொண்டு வந்து முன்கூறிய இரு விரல்களால் இடது காதையும் பிடிக்க வேண்டும் பின்பு குனிந்து வணங்கி நிமிர்ந்து வருவதே தோப்புக் கரணத்தின் முறைஎத்தனை முறை செய்ய வேண்டும் என்பது அவரவர் உடல் தகுதி, நேரத்தை பொறுத்து முடிவு செய்யலாம்.

பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, பன்னிரண்டு, பதினைந்து, இருபத்தொன்று, முப்பத்தி ஆறு என்று கணக்கில் செய்வதுண்டு. இவ்வாறு செய்வதில் பக்தரிடமிருந்து தடங்கல்கள் விலகிச் செல்லும் என்றே நம்பிக்கை.இதை அறிவியல் தொடர்பாக பார்ப்போமானால் புத்தியையுணர்த்தும் ஓர் உடற் பயிற்சியாக இதைக் காணலாம். இது இரத்த ஓட்டத்தை உணர்வடையச் செய்யும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பது உண்மை.

- இ.எஸ்.சுகந்தன்.

Tags : Ganesha ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி