×

திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் சாம்பல் நிற அணில்கள் அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேகமலை-திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் சாம்பல் நிற அணில்கள் அதிகரித்துள்ளது என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் செண்பகத்தோப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அரிய சாம்பல் நிற அணில்கள் வசித்து வந்ததால், இப்பகுதியை தமிழக அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவித்தது. மேலும், திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில், புலிகளும் வசித்து வருவதால், இந்த பகுதியை திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், புலிகள் காப்பகத்தில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் செண்பகத்தோப்பு அழகர் கோவில் பகுதிகளில் வசித்து வந்த சாம்பல் நிற அணில்கள், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களின் தொடர் கண்காணிப்பால், இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்கள் வசிக்க வசதியாக உள்ளது. இதனால், சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்….

The post திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் சாம்பல் நிற அணில்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputtur ,
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...