×

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு; கட்சி விதி திருத்துதல் ஆகியவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.!

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஈபிஎஸ் அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும், இபிஎஸ், கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபடுவதாக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானது, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ளது….

The post அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு; கட்சி விதி திருத்துதல் ஆகியவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.! appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Election Commission ,Chennai ,EPS ,Mukmukh ,Thindigul Sineivasan ,President of the Supreme ,Court ,Dinakaran ,
× RELATED தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்;...