×

கிராமப்புற மக்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக‌ சார்பில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி வைத்து கல்வெட்டு திறந்து வைத்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருத்தணி தொகுதிக்குட்பட்ட கரும்பேடு, குமாரமங்கலம், பள்ளிப்பட்டு, சி.ஆர்.பட்டறை, குமாரராஜபேட்டை, கோரகுப்பம், சஞ்சீபுரம், வெலண்கண்டிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில், `பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் விளங்குகிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இப்பகுதி வளர்ச்சி பெறவில்லை. மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பின் தங்கி உள்ளது. விவசாயம் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் கேள்விக்குறியாக உள்ளது. கிராம பகுதி மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாட்டாளி மக்கள் கட்சி பொருத்தவரை கிராமப்புறங்களில் மேம்பாட்டுக்கு அதிக முன்னுரிமை வழங்கவும், இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய பாதையில் அரசியல் பயணத்தை தொடங்கி அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கை பெறுவோம்’ என்று தெரிவித்தார். இதில் மாநில துணைத் தலைவர் வைத்தியலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி, மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்….

The post கிராமப்புற மக்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,Pallipat ,RK Pettai Unions ,Tiruvallur West District BAMAK ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...