×

ஆனி மாத விசேஷங்கள்

ஆனி 1, ஜூன் 16,  ஞாயிறு - பௌர்ணமி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.முப்பழம் சாத்துதல், பட்டீஸ்வரம் முத்துப்பந்தல், திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் ஜேஷ்டாபிஷேகம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹாலக்ஷ்மி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 2, ஜூன் 17, திங்கள் - திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். திருவஹிந்திரபுரம்
ஸ்ரீதேவநாதஸ்வாமி நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவம். கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் கருடசேவை கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் உமா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 3, ஜூன் 18, செவ்வாய் - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் பாற்குட காட்சி. இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி. மதுராந்தகம் பெரியபெருமாள் உற்சவம். ஜ்யேஷ்ட பஹுள பிரதமை.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஆக்ரோ யை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 4, ஜூன் 19, புதன் - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் பூக்குழி விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ நரஸிம்ம மூவருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மாேஹஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 5, ஜூன் 20, வியாழன் - சங்கடஹர சதுர்த்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் அபயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 6, ஜூன் 21, வெள்ளி - மதுராந்தகம் தீர்த்தவாரி, சென்னை ஸ்ரீசுகப்பிரம்ம ஆசிரம ஸ்ரீசுகப்பிரம்ம மகரிஷி ஜெயந்தி விழாதிருவோணவிரதம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீஸ்ரீனிவாஸப்பெருமாள் புறப்பாடு. திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் ரதோற்ஸவம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் சக்கர ஸ்நானம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் நிதம்பை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 7, ஜூன் 22,  சனி - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் ரிஷபவாகன சேவை. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மாண்டவீ சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 8, ஜூன் 23, ஞாயிறு - சஷ்டி சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஸ்வாஹா  சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 9, ஜூன் 24, திங்கள் - கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ப்ரசண்டா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 10, ஜூன் 25, செவ்வாய் - திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் ரதோற்சவம். மதுராந்தகம் புஷ்ப பல்லக்கு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சண்டிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 11, ஜூன் 26, புதன் - ஏயர்கோன்கலிக்காமர், துர்காஸ்வாபனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் வராரோஹா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 12, ஜூன் 27, வியாழன் - ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் புஷ்கலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 13, ஜூன் 28, வெள்ளி - ஸ்மார்த்த ஏகாதசி. திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு கண்டருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் தேவமாதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 14, ஜூன் 29, சனி -கிருஷ்ணபட்ச வைஷ்ணவ ஏகாதசி. கார்த்திகை விரதம். கூர்ம ஜெயந்தி. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகன் தங்க ரதக் காட்சி. வேளூர் கிருத்திகை, சிதம்பரம், ஆவுடையார் கோயில் உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் விசேஷ நடராஜ சிவஸ்தலங்களில் ஆனிதிருமஞ்சன உற்சவ ஆரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹாபாகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 15, ஜூன் 30, ஞாயிறு - பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ நந்தீஸ்வரர் வழிபாடு.மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. க்ருஷ்ணபட்ச மஹாபிரதோஷம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் பிங்களா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 16, ஜூலை 1, திங்கள் - மாத சிவராத்திரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஸிம்ஹிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 17, ஜூலை 2, செவ்வாய் - அமாவாசை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருவையாறு அமரதீர்த்தம், திருவள்ளூர் தெப்பம். (சூர்ய க்ரஹணம்) (தெரியாது). கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் அதிசங்கரி  சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 18, ஜூலை 3, புதன் - ஆஷாட சுத்த பிரதமை, இஷ்டி சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம். சிதம்பரம், ஆவுடையார்கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி .திருவஹிந்திரபுரம் ஸ்ரீராமன் ஜேஷ்டாபிஷேகம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் லோலாக்ஷி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 19, ஜூலை 4, வியாழன் - சந்திர தரிசனம். அமிர்த லக்ஷ்மி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சுபத்திரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 20, ஜூலை 5, வெள்ளி - சதுர்த்தி ஸாவித்திரி விரத கல்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. நாகை புண்டரீகன் ஐக்கியம். சுக்லபட்ச சதுர்த்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் லட்சுமி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 21, ஜூலை 6, சனி - சதுர்த்தி விரதம். சமிகௌரி விரதம். திருக்கோளக்குடி ஸ்ரீசிவபெருமான் பவனி. மாணிக்கவாசகர் குருபூஜை ஆனிமகம். அஹோபிலமடம், 46ம் பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் அனங்கா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 22, ஜூலை 7, ஞாயிறு - ஸ்கந்த பஞ்சமி. ஆனி உத்திர அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. அமர்நீதி நாயனார் குருபூஜை. சிதம்பரம் திருத்தேர், திருமலை சின்னஜீயர் சுவாமிகள் திருநட்சத்திரம். நடராஜர் அபிஷேகம் (பின்னிரவு)சுக்லபட்ச சஷ்டி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் விஸ்வமுகி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 23, ஜூலை 8,  திங்கள் - சஷ்டி விரதம். குமார சஷ்டி ஆனி உத்திர தரிசனம். சிதம்பரம் ஆனி திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் தண்டியலில் பவனி வரும் காட்சி. நாகை திருமாளயன் பொய்கை ஸ்ரீவரந்தருநாயகி சமேத ஸ்ரீகாளகண்டேசுவரர் வருஷாபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் தாரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 24, ஜூலை 9, செவ்வாய் - மதுரை, திருப்பரங்குன்றம் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் பவனி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மேதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 25, ஜூலை 10, புதன் - உபேந்திர நவமி, திருநெல்வேலி சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனசேவை. திருவள்ளூர் சுதர்ஸன ஜயந்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் பீமா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 26, ஜூலை 11, வியாழன் - ஸ்ரீபூமிநாத சுவாமி தெப்போற்ஸவம். ஸ்ரீகோதண்டராமஸ்வாமி ரதோற்ஸவம். திருச்செந்தூர் ஆலய வருஷாபிஷேகம், ஓரகடம் எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் தெய்வநாயகியம்மன் ஆலய வருஷாபிஷேகம். காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி ஆனி கருடன். சொக்கலிங்கபுதூர் வருஷாபிஷேகம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் துஷ்டி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 27, ஜூலை 12, வெள்ளி - ஸ்மார்த்த ஏகாதசி . கோ பத்ம விரதம் ஆரம்பம். கோவர்த்தன விரதம். மதுரை, திருப்பரங்குன்றம் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சுத்தி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 28, ஜூலை 13,  சனி - வைஷ்ணவ ஏகாதசி. ஸ்ரீ வாசுதேவத் துவாதசி. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. வேளூர் வைத்யநாதசுவாமிக்கும் ஆச்சாள்புரம் ஸ்ரீசிவலோக தியாகராஜ சுவாமிக்கும் ஸம்வத்ஸராபிஷேகம். சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மாதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 29, ஜூலை 14, ஞாயிறு - சுக்லபட்ச மஹாபிரதோஷம். பழநி ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீரங்கம் ஜேஷ்டாபிஷேகம். திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ரதோற்ஸவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் தரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 30, ஜூலை 15, திங்கள் - அருணகிரியார் குருபூஜை. திருஆவினன்குடி அன்னாபிஷேகம். காரைக்கால் மாங்கனித் திருவிழா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் த்ருதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆனி 31, ஜூலை 16, செவ்வாய் - பௌர்ணமி. சாதுர்மாஸ்ய விருதாரம்பம். வியாஸ பூஜை. வேளூர் சீதளகும்பம் பூர்த்தி, பழநி ஊர்க்கோயில், பழநி பெரிய ஆவுடையார் கோயில் அன்னாபிஷேகம். சந்திர கிரகணம். ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Tags : Annie ,
× RELATED அரியலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.5 லட்சம் பறிமுதல்