×

மாயாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு; தெப்பக்காடு தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. இதேபோல் மசினகுடி கூடலூர் வாகன போக்குவரத்துக்கும் இந்த சாலை பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தெப்பக்காடு பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் குறுக்கே நூற்றாண்டு பழமையான பாலத்தின் வழியாக நீண்ட காலமாக போக்குவரத்து நடைபெற்று வந்தது. மிகவும் பழமையான மற்றும் அகலம் குறுகிய இந்த பாலத்தை உடைத்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பாலம் முழுமையாக இடிக்கப்பட்டதால் தெப்பக்காட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிமெண்ட் தரைப்பாலம் தற்காலிகமாக போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு அதில்  தனியார் சுற்றுலாலா வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளும் சென்று வருகின்றன. இந்த தரைப்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் ஆற்றில் மழை நீர் அதிகரிக்கும் போது பாலத்தின் மீது வெள்ள நீர் வழிந்தோடும். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் இந்த பாலத்தின் வழியாக மழைக்காலங்களில் வாகனங்கள் சொல்வது ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடுவட்டம் பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளில் இருந்து ஓடும் ஆறுகள் வழியாக வரும் மழை வெள்ள நீர் மாயாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மதியத்திற்கு மேல் ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரித்ததால் தெப்பக்காடு தரைப் பாலத்திற்கு மேலாக தண்ணீர் ஓட துவங்கியது. இதையடுத்து அப்பகுதியில் தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், தரைப் பாலத்தில் உள்ள குழாய்களில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு அடைப்பை ஏற்படுத்தும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களையும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம் பகுதியில் உள்ள அடைப்புகளை சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ளப் போவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆற்றின் மீது இருந்த உயரமான பாலம் உடைக்கப்பட்டு விட்ட நிலையில் தரைப்பாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ள நீர் அதிகரித்து மூழ்குவதால் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது இப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் மசினகுடி காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்….

The post மாயாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு; தெப்பக்காடு தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Maya ,Theppakad ,Kudalur ,Mudumalai Tiger Reserve ,Teppakkad ,Ooty ,Masinagudi ,Karnataka ,Mayai ,Theppakkad ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்