×

பக்ரீத் பண்டிகையை யொட்டி கொங்கணாபுரம் சந்தையில் ரூ. 8 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில், வாரந்தோறும் சனி சந்தை  செயல்பட்டு வருகிறது. இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நேற்று ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மற்றும் சந்தைக்கு வந்திருந்தனர். மேலும், கிராம கோயில்களில் தெவ திருவிழா நடப்பதாலும் திரளான விவசாயிகள் கூடினர். மொத்தம் 11000 ஆடுகள், 3500 பந்தய சேவல் மற்றும் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ. 5400 முதல் ரூ. 6600 வரையும், வெள்ளாடு, 20 கிலோ எடையுள்ள செம்மறி, வெள்ளாடு ரூ. 11000 முதல் ரூ. 13400 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ. 2500 முதல் ரூ. 3000 வரை விற்பனையானது. பந்தய சேவல்கள் ரூ. 1000 முதல் 3500 வரை விலைபோனது. பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்களை வாங்கி சென்றனர். ஒரு கோழி 100 முதல் 1000 வரை விலை போனது. அதேபோல் 135 டன் கொண்ட காய்கறிகள்  விற்பனையானது. நேற்று சந்தையில் ரூ. 8 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். கெங்கவல்லி: தலைவாசல் தாலுகா, வீரகனூர் பேரூராட்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வளாகத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தை விட நேற்று, ஏராளமான ஆடுகளை  விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் வீரகனூர், அரும்பாவூர், பூலாம்பாடி, கெங்கவல்லி, தலைவாசல், பெரம்பலூர், ஆத்தூர், தம்மம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சேலம், கோயம்புத்தூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, துறையூர், குளித்தலை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த சந்தையில் 3500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் சுமார் ரூ. 2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஓமலூர்: ஓமலூரில் நேற்று கூடிய ஆட்டு சந்தையில், வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானது. இஸ்லாமிய மக்கள் ஆடுகளை அதிகமாக வாங்கிச் சென்றனர். ஆடுகள் விலை 500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையானதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post பக்ரீத் பண்டிகையை யொட்டி கொங்கணாபுரம் சந்தையில் ரூ. 8 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Bakreet Festivali ,Yoty Konkanapuram ,Konkanapuram ,Sani ,Bakreet Festiv ,Bakreet Festive ,Yothi Konkanapuram ,
× RELATED திமுக சார்பில் மகளிர் தின கோலப்போட்டி