×

ரூ.1 கோடி அம்பர்கிரீஸ் பறிமுதல்: 6 பேர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான அம்பர்கிரீசை கடத்தி சென்று விற்க முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செம்போடை புஷ்பவனம் பாலம் அருகில் அம்பர் கிரீஸ் (திமிங்கல எச்சம்) கடத்தி விற்பனை செய்ய இருப்பதாக கோடியக்கரை வனச்சரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செம்போடை புஷ்பவனம் பாலம் அருகில் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனவர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக 4 பைக்கில் வந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களது பைக்குகளில் ரூ.1 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேதாரண்யத்தை சேர்ந்த ஆண்டவர்(41), சிவலிங்கம்(47), மணிவாசகன்(41), இளையராஜா(37), ஓம்பிரகாஷ்(51), சரவணன்(44) என்பதும், அம்பர் கிரீஸ் கடத்தி விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து 6 பேரை கைது செய்தனர். மேலும் அம்பர் கிரீஸ் மற்றும் 4 பைக்குகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்….

The post ரூ.1 கோடி அம்பர்கிரீஸ் பறிமுதல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு