×

ரெய்டுக்கு முன்ேப ஆவணங்களை பதுக்கிய இலை கட்சியின் தலைகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திருவாரூரில் குக்கர் சத்தமே கேட்கலையாமே, என்ன ஆச்சு…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் மொத்தம் 4 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட  கோயம்பேடு கட்சிக்காரர், மாம்பழக்காரர், குக்கர், டார்ச் லைட்காரர் கட்சிகளுக்கு எல்லாம் டெபாசிட் போச்சாம். தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில் இப்போது கட்சி தொண்டர்கள் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி அவங்க அவங்க வேலையை பார்க்கிறார்களாம்.. கட்சி தலைமை சொன்னால் மட்டுமே சில வேலைகளை செய்யுறாங்களாம். மாவட்ட செயலாளர், தலைவர்கள் சொன்னால் கூட கேட்பது இல்லையாம். அப்படியே கேட்டாலும் கரன்சி கொடுங்க கிராண்டா விழா நடத்துறேன். மற்றபடி என்ன எதற்கும் அழைக்காதீங்க.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு.. வேலைக்கு போகணும், தொழிலை கவனிக்கணும்னு சொல்லிட்டு நழுவி போறாங்களாம். அதேபோல டெபாசிட் காலியான கட்சி தலைமைகளும் தங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம். இன்னும் நாலு வருஷம் இருக்கு.. அதுவரைக்கும் அரசியலை விடுத்து வீடு, தொழிலை கவனித்தால் தான், குக்கரில் போட்ட அரிசி பொங்கலாகும். வைக்கோல் போட்டால் தான் மாம்பழம் பழுக்கும்… கடையை திறந்தால்தான் மார்க்கெட்டில் வியாபாரம் ஆகும் என்ற நிலைக்கு வந்துட்டாங்களாம். அதனால தொகுதிக்கு பத்து பேர் கூட ஒரு கூட்டத்துக்கு இந்த கட்சியில் இருந்து வருவதே இல்லையாம். அதுமட்டுமில்ல குக்கர் சைடுல அந்த எண்ணிக்கையும் குறைந்து போச்சாம்… இந்த கட்சிகளை இனி நம்பி கடன் வாங்கி கட்சிக்காக செலவு செய்தால் வீதிக்கு தான் வரவேண்டிய நிலை ஏற்படும். பேசாம மாற்று கட்சிகளுக்கு சென்று விடலாம் என முடிவெடுத்து நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒவ்வொருவராக மாற்று கட்சிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளார்களாம். மேலும் திருவாரூர்ல குக்கர்  கட்சியே இல்லை என்று சொல்லலாம் என்கிறார்கள், அவுங்க கட்சி நிர்வாகிங்க…’’  என்றார் விக்கியானந்தா.‘‘சேப்டி… சேப்டினு சொல்றாங்களே யார்… எதை சேப்டி பண்ணாங்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவையில் சேலம்காரர் மற்றும் மாஜி அமைச்சரான பெல் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி ரெய்டு இலை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ரெய்டுக்கு உள்ளான சிறிய பினாமிகள், இந்த சிக்கலான விஷயத்தில் இருந்து வெளிவருவது எப்படி… என தங்களது ஆடிட்டர்களை தேடி ஓடினாங்க. பல பினாமிகள் சேப்டியாக பணம், நகை, வீடு, மனைகளை சேப்டியாக சேர்த்துட்டாங்க. அவை எல்லாம் சிறுவர் கதை படிப்பதை போல ஏழு மலை, ஏழு கடல் தாண்டி சேப்டியாக இருக்காம். இவர்களைப்போலவே இலைக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களில் ‘குட்டி’யானவர்தான்  பெரும் நடுக்கத்தில் இருக்காராம். அதாவது, இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் சம்பாதித்து பதுக்கி உள்ளாராம். பினாமி பெயரில் உள்ளதாம். தன் செல்போன், தன் நடவடிக்கைகள், தன் பினாமியின் நடவடிக்கைகள் பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்ததும் அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதானாம். ஆனாலும், தனது வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் ஐ.டி. ரெய்டு வரலாம் எனக்கருதி வீட்டில் உள்ள ஆவணங்களை எல்லாம் தனது அடிபொடிகளின் வீடுகளுக்கு இடமாற்றம் செய்துவிட்டாராம். அந்த அடிபொடிகளுக்கு அட்ரசே இல்லையாம். எப்போதாவது வந்து 500 அலலது 1000 வாங்கிச் செல்வதுதான் வழக்கமாம். எனவே, ரெய்டு வந்தாலும் எனது வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என நெருங்கிய வட்டாரத்தில் மட்டும்தான் ரெய்டு நடத்துவார்கள். அடிபொடிகளை கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால்தான் எல்லாவற்றையும் அங்கே கொண்டுசென்று, சேப்டி செய்துட்டேன் என்கிறாராம் இந்த மாஜி. அதேசமயம், நடப்பில் உள்ள ‘பெண் கடவுள்’ பெயர் கொண்ட ஒரு இலைக்கட்சி எம்எல்ஏவும் ரொம்பவே கலக்கத்தில் இருக்கிறாராம். மசாலா பாக்கெட் விற்றுக்கொண்டிருந்த உங்களுக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் வருமானம் வந்தது எப்படி என ஐ.டி. அதிகாரிகள் தன்னை துருவி எடுப்பார்கள் என பயந்த இவர், ஆவணங்களை எல்லாம், மதுரையில் உள்ள ஒரு நெருங்கிய உறவினர் வீட்டுக்கு இடம் மாற்றி விட்டாராம்… மதுரையில் உள்ள உறவினரோ என்னை விட்டுடுங்க… எங்க வீட்டுல ரெய்டு நடந்தா எங்க குடும்பத்துக்கு அசிங்கம்னு சொல்றாங்களாம்… இருந்தாலும் அந்த பெண் பெயரை கொண்ட எம்எல்ஏ அதை நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனி நகருல தேனிக்கு எதிராக ெலட்டர்பேடு அமைப்பு ஒட்டிய போஸ்டர் நல்லா வேலை செய்து போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இரட்டைஇலையின் மைக் மோகன் என்று கட்சியினரால் அழைக்கப்படும் மாஜி, எம்பி பதவி கிடைக்காததால் கடும் கோபத்தில் இருந்தாராம். அந்நினைவு வரும்போதெல்லாம் தேனிக்காரரை பிடிபிடியென பிடிக்கிறாராம். இவரை பின்னுக்கு தள்ளிவிட்டு மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த சட்டம் தெரிஞ்ச ஒருவர் மைக்கை பிடிக்க படுவேகமாக களம் இறங்கியிருக்காராம். இவருக்கு கட்சியினரிடையே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்காம். சேலத்துக்காரர் இல்லைன்னா இந்த கட்சிய காப்பாத்த கடவுளாலும் முடியாதுன்னு சொல்றாராம். இவரோட பேச்சு மாங்கனி மாஜிக்கு ரொம்பவுமே பிடிச்சுப்போச்சாம். எதை எப்படி ரசிப்பாருன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்ட அவரு, போஸ்டர் யுத்தத்திலும் களம் இறங்கியிருக்காராம். அரசியல் ரீதியான போஸ்டரை தாண்டி, சமூக ரீதியான போஸ்டரை ஒட்டி புதிய சர்ச்சையை கிளப்பி இருக்காராம். இதற்காக தானே தலைவராகவும், தொண்டராகவும் இருக்கும் தனது லட்டர்பேடு அமைப்பு சார்பில் தேனிக்காரருக்கு எதிராக மாங்கனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்காராம். இவர் போகும் வேகத்தை பார்த்தால் தன்னிடம் இருக்கிற மைக் பறிபோயிடுமோன்னு தலைநகர் மாஜிக்கே உதறல் வந்துரும்போல என்று கலாய்க்கின்றனர் உள்ளூர் இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா….

The post ரெய்டுக்கு முன்ேப ஆவணங்களை பதுக்கிய இலை கட்சியின் தலைகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,yananda ,Thiruvarur ,Peter ,Manuniti Choshan District ,wiki Yananda ,
× RELATED வெயில் தணித்த நல்ல மழை...