×

மார்னஸ், ஸ்மித் சதம் விளாசல் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

காலே: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் வார்னர் 5 ரன், கவாஜா 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். மார்னஸ் லாபுஷேன் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 சேர்த்தது. லாபுஷேன் 104 ரன் (156 பந்து, 12 பவுண்டரி), ஹெட் 12, கிரீன் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). ஸ்மித் 109 ரன் (212 பந்து, 14 பவுண்டரி), அலெக்ஸ் கேரி 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரியா 3, ரஜிதா, ரமேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது….

The post மார்னஸ், ஸ்மித் சதம் விளாசல் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marnus ,Smith ,Australia ,Galle ,Sri Lanka ,Galle… ,Dinakaran ,
× RELATED அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில்...