×

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா

சென்னை: சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், அரிவாளில் விபூதி, குங்குமம் வைத்து, நடுவில் வேல் உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் படத்தையும் சூர்யா முடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : RJ Balaji ,Chennai ,Suriya ,R.J. Balaji ,Vibhuti ,A.R. Rahman ,SR Prabhu ,Dream Warrior Company ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இயக்குனர் ஆனார் சூர்யா மகள்