சென்னை: புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக உருவாகிறது ‘அலங்கு’. எஸ்.பி. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரு படங்களை இயக்கியவர். தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர். கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார்.
மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது. டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது சக்தி பிலிம் பேக்டரி. டி.சபரிஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு முன் இந்நிறுவனம் ஜிவி.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ படத்தை தயாரித்திருந்தனர்.
The post பழங்குடியினரின் வாழ்க்கையை சொல்லும் அலங்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.