×

வேலூர், சத்துவாச்சாரியில் 200 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

வேலூர் : வேலூர் மீன் மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி மார்க்கெட் பகுதிகளில் அழுகிய மீன்களும், ரசாயனத்தால் பாதுகாக்கப்பட்ட மீன்களும் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் செந்தில், ராஜேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் கொண்ட குழுவினர் வேலூர் மீன் மார்க்கெட் மற்றும் சத்துவாச்சாரி மார்க்கெட்டுகளில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேலூர் மீன் மார்க்கெட்டில் 50 கிலோ மீன்களும், சத்துவாச்சாரியில் 150 கிலோ மீன்களும் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.இம்மீன்களை உடனடியாக ஆசிட் திரவம் மூலம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனர். மேலும் வியாபாரிகளுக்கு அழுகிய மீன்கள், ரசாயனத்தால் பாதுகாக்கப்படும் மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.மேலும் உணவு  பாதுகாப்பு அலுவலர்களின் இந்த சோதனையில் வேலூர் மீன் மார்க்கெட்டில் 6 பேர், சத்துவாச்சாரியில் 2 பேர் தங்கள் கடைகளுக்கான ‘எப்எஸ்எஸ்ஏ’ சான்றை புதுப்பிக்காமல் இருந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன….

The post வேலூர், சத்துவாச்சாரியில் 200 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sattuvachari, Vellore ,Vellore ,Sattuvachari ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...