×

பக்ரீத் பண்டிகையையொட்டி மோர்பாளையம் சந்தையில் ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு தாலூகா மோர்பாளையத்தில் வாரச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதனையொட்டி ஆடு, மாடு, எருமை, கோழிகள் விற்பனை நடக்கும். பிரசித்தி பெற்ற இந்த கால்நடை சந்தைக்கு, வியாழக்கிழமையே ஆடுமாடுகளை விற்கும் விவசாயிகளும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளும் திரண்டு வருவர். ஆடு, மாடு விற்பனை சனிக்கிழமை மாலை நிறைவடையும். பக்ரீத் பண்டிகை நாளை 10ம் தேதி நடைபெற உள்ளதால், ஆடுகள் விற்பனை கனஜோராக நடந்தது. நாட்டு வெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, நாட்டு  செம்மறியாடு, துவரம் செம்மறி போன்ற ரக ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகளே அதிகம் விற்கப்பட்டது. ₹10 ஆயிரம் முதல் ₹35 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது.இந்த ஆடுகளை வாங்க சேலம், நாமக்கல், பள்ளப்பட்டி, புதுக்கோட்டை, கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்களும், வியாபாரிகளும் வந்திருந்தனர். மோர்பாளையம் சந்தையில் குறைந்த விலையில் ஆடுமாடுகளை வாங்கலாம் என்ற நம்பிக்கை வியாபாரிகளிடம் உள்ளது. நேற்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டனர். நேற்று மட்டும் ஆடுகள் ₹2 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post பக்ரீத் பண்டிகையையொட்டி மோர்பாளையம் சந்தையில் ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Morpalayam market ,Bakrit festival ,Tiruchengode ,Morpalayam ,market ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...