×

மைதா அல்வா

தேவையான பொருள்கள்

மைதா - 100 கிராம்
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - 1
சர்க்கரை - கால் கப்
நெய் - கால் கப்
ஏலக்காய், முந்திரி - 10

செய்முறை

மைதாவை சுத்தமான தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். மைதா மாவை மெல்லிய துணியில் வடிகட்டி எடுக்கவும். எடுத்த மைதா பால் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொதிக்கவிட்டு இறக்கவும். வெல்லக் கரைசலும் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும். தேங்காயைத் துருவி அதில் இருந்து ஆறு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.மைதா பால், வெல்லக் கரைசல், தேங்காய்ப் பால் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து, அடிப்பிடிக்காதபடி நன்றாகக் கிளறவும்.சர்க்கரைக் கரைசல் கறுத்து வரும் சமயத்தில், கலந்து வைத்திருக்கும் மைதாக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் சமயத்தில் நெய் சேர்க்கவும். கடைசியில் ஏலக்காயை பொடி செய்து போடவும். நெய்யில் சிவக்க வறுத்த முந்திரியை மேலாகத் தூவி இறக்கிவிடவும்.

Tags : Maida Alva ,
× RELATED சுந்தர வேடம்