×

மூடுபனி, சாரல் மழையால் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் கல்வராயன்மலை கிராமங்கள்

கல்வராயன்மலை: கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக சாரமல்மழை பெய்து வருவதால் வெள்ளிமலையை சுற்றி உள்ள கிராமங்கள் மேகமட்டத்துடன், இருள்சூழ்ந்து காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் வெள்ளிமலை, கருமந்துறை, மணியார்பாளையம், கிளாக்காடு உள்ளிட்ட 172 சிறு மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. இந்த கல்வராயன்மலையில் மலைமக்கள் பிரதான தொழிலாக மரவள்ளி சாகுபடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை இல்லாமல் வறட்சியின் காரணமாக மரவள்ளி முற்றிய நிலையிலும் அறுவடை செய்ய முடியாமல் இருந்தது. மரவள்ளி வயலிகள் காய்ந்துபோய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் கல்வராயன்மலையில் பெரும்பாலான கிராமங்களில் பகலில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பகலிலேயே சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் உள்ள பெரியார், மேகம், செருக்கல், கவ்வியம் போன்ற நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவில் நீர் கொட்டுகிறது. பகலிலும் அதிக அளவில் மூடுபனி பொழிவால் சாலைகள் இருண்டு காணப்படுவதால் வாகன ஓட்டிகளால் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது. அதைப்போல கல்வராயன்மலையில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருவதால் மரவள்ளி வளர்ச்சிக்கும், அறுவடை செய்வதற்கும் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதனால் கல்வராயன்மலையில் உள்ள வயல்களில் மரவள்ளி அறுவடை அதிக அளவில் உள்ளதால் மலைமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். …

The post மூடுபனி, சாரல் மழையால் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் கல்வராயன்மலை கிராமங்கள் appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Vellimalai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது