×

கன்னியாகுமரி கடலில் கிடைக்கும் பல வண்ண மணலை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தும் ஆசிரியர்

கன்னியாகுமரி: கொட்டாரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் கன்னியாகுமரி கடலில் கிடைக்கும் பல வண்ண மணலை கொண்டு ஓவியம் வரைந்து அனைவரையும் வியப்படைய வைத்து வருகிறார். கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (67). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகு ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார். இவர் பல வண்ண மணலைக் கொண்டு ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். அந்த ஓவியங்களை காட்சிப்படுத்தியும் வருகிறார். ஓவியம் வரைவதற்கு கன்னியாகுமரி கடலில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை போன்ற பல நிற மணல்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த மணல்களை கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஓவியங்களை வரைந்துள்ளார். சமீபத்தில் இவர் வரைந்த கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோரின் மணல் ஓவியங்களை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந் தேதி அவர் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் ஒட்டோவியங்களை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சியில் வைக்க உள்ளதாக, கோபாலகிருஷ்ணன் கூறினார். …

The post கன்னியாகுமரி கடலில் கிடைக்கும் பல வண்ண மணலை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தும் ஆசிரியர் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kottaram ,
× RELATED ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு..!!